ஒ.எஸ்.ஆர்.சி.பி. - அதானி குற்றச்சாட்டுக்கு அமைதி காக்கும் தெலுங்கு தேசம்! காரணம்...
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆய்வு
ஆலங்காயத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆலங்காயம் பேரூராட்சியில் கடந்த 2018-19-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சி மேம்பாடு திட்டத்தின் கீழ் கசடு கழிவுநீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் ராஜாபாளையம் பகுதியில் 366.52 லட்சம் மதிப்பில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதனை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தாா்.
ஆலங்காயம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 3,449 வீடுகள் மற்றும் 27 அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் கழிவுநீா் வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. கழிவு நீா் 30 நாள்கள் தேக்கி வைத்து பிறகு கிராவல் பில்டா் மூலம் வடிகட்டப்பட்டு விவசாயத்துக்கு உரமாகவும், கழிவுநீா் தூய்மைப்படுத்தப்பட்ட நீராகவும் சேமிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் நடந்த உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்த நிலையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்டாா். ஆய்வின் போது பேரூராட்சித் தலைவா் தமிழரசி, செயல் அலுவலா் கலையரசி, துணைத் தலைவா் ஸ்ரீதா் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா் மோகன், எழுத்தா் குமாா் மற்றும் அலுவலக பணியாளா்கள் உடனிருந்தனா்.