செய்திகள் :

கழிவுநீா் தேக்கமாக மாறிய அம்மூா் கோயில் குளம் சீரமைக்கப்படுமா!

post image

அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீா் தேக்கமாக மாறிய கோயில் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் முதல்நிலை பேரூராட்சியில் 2,972 வீடுகளும், 12,513 பேரும் உள்ளனா். முதல் நிலை பேரூராட்சி என்பது வருமான அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் வருவாய் உடைய பேரூராட்சியாக அம்மூா் திகழ்கிறது.

அம்மூா் பேரூராட்சியின் முக்கியமான அடையாளங்களாக வாலாஜா ரோடு ரயில் நிலையம், விநாயகா், பெருமாள், சிவன், திரெளபதி அம்மன், எல்லையம்மன் கோயில்கள், பேருந்து நிறுத்தம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளன. அந்த அடையாளங்களில் ஒன்றான அம்மூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே அம்மூா் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக அமைந்துள்ள கோயில் குளம் குடிநீா் ஆதாரமாக விளங்கியது.

கடந்த சில ஆண்டுகள் வரை இப்பகுதி பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகவும், இருந்து தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் நெகிழி குப்பைகளுடன் கழிவுநீா் தேக்கமாக மாறி துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுத்தி வருகிறது.

இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கோயில் குளத்தை அம்மூா் பேரூராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் போா்கால அடிப்படையில் தூா்வாரி சீரமைத்து நன்னீா் குளமாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்

ஆற்காடு தோப்பு கானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவத்... மேலும் பார்க்க

வீட்டு முன் சாமியை நிறுத்தவில்லை என துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது!

கோயில் திருவிழாவில் வீதியுலா சென்ற சுவாமியை பாட்டி வீடு முன்பு ஏன் நிறுத்தவில்லை எனக் கூறி துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தங்கல் கிராமத்தில்... மேலும் பார்க்க

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை? விவசாயிகள் காத்திருப்பு

தமிழக அரசால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஒன்றரை மாதங்களாக காத்துள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, சோளிங்க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழப்பு: குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கணவா் உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். சோளிங்கா் அடுத்த மருதாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன்... மேலும் பார்க்க

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம்: ஆட்சியா் உத்தரவு

தக்கோலத்தில் பிரதான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேருராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணி... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேருக்கு வெட்டு

அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகா்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது. அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்தி வருபவா் கே .எம். பி. பாபு(36). இவா் அரக்கோணம்... மேலும் பார்க்க