ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம்: தமிழக அரசு
கவனத்தை ஈர்க்கும் ‘கேம் சேஞ்சர்’ புதிய பாடல் விடியோ!
தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய பாடல் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதால் கேம் சேஞ்சர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலக முழுவதும் படம் அடுத்தாண்டு ஜன.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ‘தோப்’ பாடல் விடியோ இன்று(டிச. 22) வெளியாகியுள்ளது. யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியான 7 மணி நேரத்தில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் நடன அசைவுகளைக் கச்சிதமாக ஆடி பார்வையாளரக்ளை வெகுவாக ஈர்த்துள்ளார் ராம் சரண். வெஸ்டர்ன் ஸ்டைலில் ராப் இசை பாணியில் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் தமன். வண்ணமயமான பின்னணி பாடலுக்கு வசீகரத்தைக் கூட்டுகிறது.