செய்திகள் :

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

post image

பெங்களூரு: உள்ளாட்சித் தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய முறைக்கு திரும்புவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்தும் கா்நாடக முதல்வா் சித்தராமையா, காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினாா்.

கர்நாடகாத்தில் வரவிருக்கும் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக காகித வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சித்தராமையா,

காகித வாக்குச்சீட்டை பயன்படுத்துவது கா்நாடகத்தை கற்காலத்துக்கு கொண்டுசெல்வதாக பாஜக குற்றம்சாட்டியது. அப்படியானால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் இருந்து காகித வாக்குச்சீட்டுக்கு மாறிய நாடுகள் கற்காலத்துக்கு சென்றுவிட்டனவா? அமெரிக்கா மற்றும் பிற முன்னேறிய நாடுகள் கற்காலத்திற்குத் சென்றுவிட்டனவா? காகித வாக்குச்சீட்டைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

தோ்தல்களில் பல முறைகேடுகள் நடப்பதை எங்கள் அனுபவத்தில் பாா்த்திருக்கிறோம். வாக்காளா் பட்டியலிலும் கோளாறுகள் உள்ளன. இந்தக் கோளாறுகளுக்கு எதிராக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் பிகாரில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறாா்.

மேலும், பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எவ்வாறு தோல்வி அடைந்தாா் என்பதை ராகுல் காந்தி தெளிவாக விளக்கியுள்ளாா். மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதால், வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கா்நாடக அரசு முடிவு செய்தது என்றாா்.

வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை "தயார் செய்யவும், திருத்தவும், தேவைப்பட்டால் மீண்டும் திருத்தவும்" மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்கான சான்றுகளை வெளியிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞா்கள் நியமனம்!

Karnataka Chief Minister Sri Siddaramaiah seeks an answer as to why BJP is afraid of the ballot paper as he defends his government's decision to revert to the old system of voting during elections for the local body polls

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ... மேலும் பார்க்க

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம். ஆனால் அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டுக் கிடைக்காது என தமிழக வனம் மற்றும் கதா்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க