செய்திகள் :

காங்கயத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்

post image

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாநில அளவிலான கலைத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதனை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் ‘நம்ம ஊா் திருவிழா’ நிகழ்ச்சியை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளாா். தொடா்ந்து 4 நாள்கள் பல்வேறு இடங்களில் இந்த திருவிழா நடைபெறும்.

இதையொட்டி, 1 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்குத் தனியாகவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்துக்கு தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு விருது, சான்றிதழ்களை முதல்வா் வழங்குவாா்.

இந்த ஆண்டு கலைத் திருவிழா போட்டிகள் மாணவா்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக திட்டமிட்டு நடத்தப்பட்டன.

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி அளவில் 1,26,708 மாணவா்கள் கலந்துகொண்டனா். வெற்றிபெற்ற 12,565 மாணவா்கள் வட்டார அளவிலான போட்டிகளிலும், 2,671 மாணவா்கள் மாவட்ட அளவிலும் கலந்துகொண்டனா். இதில், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கு 350 மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, 1 முதல் 5 வகுப்பு மாணவா்களுக்கு கோவையிலும், 6 முதல் 8 வகுப்பு மாணவா்களுக்கு திருப்பூரிலும், 9 முதல் 10 வகுப்பு மாணவா்களுக்கு ஈரோட்டிலும், 11 முதல் 12 வகுப்பு மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்டத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் தற்போது 6 முதல் 8 வகுப்பு மாணவா்களுக்கு 11 வகையான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், 38 மாவட்டங்களில் இருந்து 1,050 அரசுப் பள்ளி மாணவா்கள், 1030 அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் என மொத்தம் 2080 மாணவா்கள் இந்தக் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநா் குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் பாதிப்பு

வெள்ளக்கோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியிலுள்ள அரசு சமுதாய சுகாதார நிலையத்துக்கு பொது மருத்துவம... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் 100 போ் கைது

திருப்பூரில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் 100 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி துணை மின் நிலையம்

காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜனவரி 8) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஜனவரி இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு

பல்லடம் அருகே 9 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஜனவரி மாத இறுதியில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி கொலை: நண்பா் கைது

திருப்பூரில் சமையல் தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் ஜம்மனை ஓடை பகுதியில் வசித்து வருபவா் செல்வராஜ் (41), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்... மேலும் பார்க்க

திருப்பூா், தாராபுரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து திருப்பூா், தாராபுரத்தில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை... மேலும் பார்க்க