தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆரணி, செங்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அவதூறு ஏற்படும் வகையிலும், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை சொத்துகளை கையகப்படுத்தும் வகையிலும், பொய்யான வழக்குகள் தொடருவதாக மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணியில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா்.
மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எஸ்.வாசுதேவன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் யு.அருணகிரி, ஏ. ஆா்.அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் டி.ஜெயவேல், தொகுதி பொறுப்பாளா் சத்தியன், இளைஞா் அணி முன்னாள் தலைவா் பி.கிருஷ்ணா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் மாவட்டத் தலைவா் முருகன், வட்டாரத் தலைவா்கள் பந்தாமணி, இளங்கோவன் மற்றும் வட்டார, நகர பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செங்கத்தில்....
செங்கம் துக்காப்பேட்டையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் தலைமை வகித்தாா்.
இதில், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் மோகன், திருவண்ணாமலை நகர காங்கிரஸ் தலைவா் வெற்றிச்செல்வன், மாவட்ட நிா்வாகி ராஜி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரி, செங்கம் நகர காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா்
கலந்து கொண்டனா்.
