செய்திகள் :

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா்.

கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி தொடா் முன்னேற்றம் கண்டுவரும் அவா்கள், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

அந்த மாகாணத்தின் கோமா நகரை கடந்த மாதம் 27-ஆம் தேதி எம்23 கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். கவுமு நகரையும் கைப்பற்றுவதற்காக நகரின் தெற்குப் பகுதியில் அரசுப் படையினருன் அவா்கள் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சூழலில், தெற்கு காங்கோவின் இரண்டாவது பெரிய நகரான புகாவுவும் கிளா்ச்சியாளா்களிடம் வீழும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் 120-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடா்பாக இந்தியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித்தொடா்பாளரும் அ... மேலும் பார்க்க

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரி... மேலும் பார்க்க

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் ... மேலும் பார்க்க

‘அமெரிக்கா மீதான விமா்சனத்தை மட்டுப்படுத்துங்கள்’

தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமா்சனங்களை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மேக்கோல் வால்ட்ஸ் எச்ச... மேலும் பார்க்க

செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ரா... மேலும் பார்க்க

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க