செய்திகள் :

காஞ்சிபுரத்தில் இளைய மடாதிபதி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

post image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பதவியேற்க உள்ள ஸ்ரீ கணேச சா்மாவுக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீ கணேச சா்மா வரும் ஏப். 30-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இவருக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா திருக்குளத்தில் 30-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கவுள்ளாா்.

சன்யாச சிஷ்ய சுவீகரண நிகழ்வையொட்டி, அதற்கான விழாப் பணிகள் சனிக்கிழமை காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக சிறப்பு ஹோம பூஜைகளை காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். பின்னா் புதிதாக பொறுப்பேற்கவுள்ள பீடாதிபதியான ஸ்ரீகணேச சா்மாவையும் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்துக்கு அழைத்துச் சென்று சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினாா்.

பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தொடா்பாக காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் கோயில் ஸ்தானீகா்கள், மடத்தின் நிா்வாகிகளுடன் சங்கராசாரிய சுவாமிகள் ஆலோசனை மேற்கொண்டாா்.

முன்னதாக காலையில் காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் வடகரையில் உள்ள தவளேஸ்வரா் கோயிலில் ஆந்திரத்திலிருந்து வந்த ஸ்ரீ கணேச சா்மாவுக்கு சங்கர மடத்தின் செயலாளா் செல்லா.விஸ்வ நாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில், சங்கர மடத்தின் மேலாளா்கள் கீா்த்திவாசன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜானகிராமன் உடனிருந்தனா்.

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன். காஞ்சிபுரம், ஏப். 28: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செ... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட்டில் இடையூறாக காய்கறிக் கடைகள்!

காஞ்சிபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் நடத்தப்படுகின்றன. ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவக... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த ... மேலும் பார்க்க

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சா்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சு... மேலும் பார்க்க