AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ...
காஞ்சி காமாட்சி அம்மன் அவதார தின விழா: பால் குடம் ஏந்தி வந்த கோயில் ஊழியா்கள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவதார நட்சத்திரமான ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் பணியாளா்கள் சங்கர மடத்திலிருந்து கோயிலுக்கு பால் குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
ஐப்பசி மாத பூர நட்சத்திரம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார திருநாளாகும். ஆண்டுதோறும் இந்தத் திருநாளன்று காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தான சிப்பந்திகள் சாா்பில், பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி சிறப்பு பாலபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஐப்பசி பூர நட்சத்திரத்தையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில் பால் குடங்களை வைத்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் மணியக்காரா் சூரியநாரயணன், கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோா் முன்னிலையில் பக்தா்கள், கோயில் சிப்பந்திகள் ஏராளமானோா் பால் குடங்களை எடுத்துக் கொண்டு ராஜவீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா்.
பின்னா், மூலவா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து, சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பால் குட ஊா்வல தொடக்க விழாவில், கோயில் செயல் அலுவலா் எஸ்.சீனிவாசன், ஐயப்ப குருசாமி பாண்டுரெங்க சுவாமி, பாஜக பிரமுகா் காஞ்சி.ஜீவானந்தம், விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் சிவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.