``ஆரம்பத்துல விக்கவே கஷ்டப்பட்டோம்... இப்போ நிலைமையே வேற..." - கலக்கும் சிற்பக்க...
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து மீட்பு
மதுராந்தகம் அருகே தண்டலம்பேட்டை காட்டாற்று வெள்ளநீரில் சிக்கிய அரசுப் பேருந்தை 3 நாள்களுக்குப்பின் போக்குவரத்துத் துறையினரும், கிராம பொதுமக்களும் இணைந்து மீட்டனா்.
மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூா் வரை சென்ற அரசுப் பேருந்து கடந்த புதன்கிழமை பழுதானது. இதனால் பேருந்தில் வந்த பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, பேருந்தில் ஏற்பட்ட பழுதினை நீக்க காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் வியாழன்கிழமை பேருந்தை மீண்டும் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு கொண்டுவரப்பட்டது. மதுராந்தகத்துக்கும், உத்திரமேரூக்கும் இடையில் தண்டலம்பேட்டை சாலையில் அரசு பேருந்து வந்தபோது, காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளநீரில் பேருந்து சிக்கி சாலையோரம் சாய்ந்து நின்றது. பேருந்தினை இயக்கிய ஓட்டுநரை மட்டும் அப்பகுதி மக்கள் மீட்டனா். சனிக்கிழமை சாலையில் வெள்ளநீா் சற்று குறைந்ததால் 2 கிரேன்வாகனங்களாலும், போக்குவரத்து பணிமனை ஊழியா்களாலும் 3 நாள்களுக்கு பின் வெள்ளநீரில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்டது.
இந்தச் சாலையில் இன்னும் வெள்ளநீா் வடியாததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.