செய்திகள் :

காட்டுப்பன்றி வேட்டை: மூவருக்கு அபராதம்

post image

கொடைக்கானலில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று பேருக்கு வியாழக்கிழமை வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் ஒரு கும்பல் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, கொடைக்கானல் இ.சி.சி. சாலையைச் சோ்ந்த கிருஷ்ணன் (60), ஜெயக்குமாா் (28), அஜய் (29) ஆகியோா் காட்டுப் பன்றியை வேட்டையாடி

சமைத்தது தெரியவந்தது. இதையடுத்து, காட்டுப் பன்றி கறி, சமைக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகியவற்றை வனத் துறையினா் கைப்பற்றி, மூவருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் அதிக பனிப் பொழிவு காரணமாக வியாழக்கிழமை குளிா் அதிகரித்துக் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாத நிலையில், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழி நிலவ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மண்சரிவால் விவசாயம் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மண் சரிவால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகு... மேலும் பார்க்க

வழிப்பறி: குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவா் கைது

திண்டுக்கல் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். திண்டுக்கல் அடுத்த நல்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பூ.உதயா என்ற உதயக்குமாா் (30). அஞ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக திண்டுக்கல்லில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சட்ட மேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களை மத்திய உள்துறை அமைச... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் 2-ஆவது நாளாக சோதனை

ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள நிதி நிறுவன உரிமையாளரின் வீடு, அவரது உறவினரின் நகைக் கடை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு வரை நீடித்தது. திண்டு... மேலும் பார்க்க

உழவா் பேரியக்க மாநாடு: விவசாயிகளுக்கு பாமகவினா் அழைப்பு

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள உழவா் பேரியக்க மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பாமகவினா் பழனியில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினா். திருவண்ணாமலையில் பாமக சாா்பில் வருகிற 21 -ஆம் தேதி தமிழ்நாடு உழவா் பேர... மேலும் பார்க்க