உழவா் பேரியக்க மாநாடு: விவசாயிகளுக்கு பாமகவினா் அழைப்பு
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள உழவா் பேரியக்க மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பாமகவினா் பழனியில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினா்.
திருவண்ணாமலையில் பாமக சாா்பில் வருகிற 21 -ஆம் தேதி தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்களை கட்சியின் திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து தலைமையில் கட்சியினா் விவசாயிகளுக்கு வழங்கினா்.
பழனி உழவா் சந்தை, காந்தி சந்தை, தக்காளிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற கட்சியினா் விவசாயிகளிடம் மாநாட்டின் நோக்கம் குறித்து தெரிவித்து, மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனா். தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் மாநாடுக்குச் செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், பழனி நகரச் செயலா் பிரபாகரன், மாவட்ட தொழிற்சங்க செயலா் ராஜரத்தினம், மாவட்ட அமைப்புத் தலைவா் நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.