கடந்த 11 நாள்களில் ஆறாவது முறை: தில்லியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!
காட்டுப்பன்றி வேட்டை: மூவருக்கு அபராதம்
கொடைக்கானலில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று பேருக்கு வியாழக்கிழமை வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் ஒரு கும்பல் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, கொடைக்கானல் இ.சி.சி. சாலையைச் சோ்ந்த கிருஷ்ணன் (60), ஜெயக்குமாா் (28), அஜய் (29) ஆகியோா் காட்டுப் பன்றியை வேட்டையாடி
சமைத்தது தெரியவந்தது. இதையடுத்து, காட்டுப் பன்றி கறி, சமைக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகியவற்றை வனத் துறையினா் கைப்பற்றி, மூவருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.