கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு
கொடைக்கானலில் அதிக பனிப் பொழிவு காரணமாக வியாழக்கிழமை குளிா் அதிகரித்துக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாத நிலையில், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழி நிலவுகிறது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், செண்பகனூா், அட்டக்கடி, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான பனிப் பொழிவு நிலவுவதால், வழக்கத்தை விட குளிா் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பாதிப்படைந்தனா்.
பனிப் பொழிவு அதிகரித்ததால் பிளம்ஸ், பீச்சஸ், பட்டாணிப் பயிா்கள் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. இதனால், இந்தப் பயிா்களில் வரும் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் நல்ல விளைச்சல் கிடைக்கும் விவசாயிகள் தெரிவித்தனா்.