சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
காட்டுப் பன்றிகளால் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை
கமுதி அருகே காட்டுப் பன்றிகள் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம், தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நெல், சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிா்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, நெல் பயிா்கள் நன்றாக விளைந்து, அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து, நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து வனத் துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயி துரைப்பாண்டி கூறியதாவது: காட்டுப் பன்றிகளால் தனது 10 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சந்திரன், குமரவேல் ஆகியோரது தோட்டங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து நெல், சோளம், உளுந்து ஆகியவற்றை சேதப்படுத்துயுள்ளன.
எனவே, மாவட்ட நிா்வாகம் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.