செய்திகள் :

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

post image

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், சாலையோரம் தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக, இரவில் பேருந்து நிறுத்தப்பட்டிருக்கும். காலையில் மாணவர்களை ஏற்றிச் செல்ல பேருந்து அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும். இன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று முற்பகலில், திடீரென பேருந்திலிருந்து லேசாக புகை வந்து, பிறகு தீப்பற்றி எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது.

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதா... மேலும் பார்க்க

நாம் தமிழரிலிருந்து விலகலா? -காளியம்மாள் விளக்கம்

நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழா் கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மகளிா் பாசறை மாந... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க