டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
காட்பாடி: துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு... வெளியே டீ, சமோசா, சிக்கன் பிரியாணி.. மெனு விவரம்!
வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதே வீட்டில் அவரின் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் வசித்துவரும் நிலையில், காட்பாடியில் அவர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால், துரைமுருகன் வீட்டுக்கு வெளியே தி.மு.க-வினர் குவியத் தொடங்கவே, அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சென்னையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வேலூர் மாநகர தி.மு.க நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவரும் காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார்.
அவரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் ரூ.10.57 கோடி பணத்தை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, எம்.பி கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏறக்குறைய 200 ஏக்கரிலான அரசுப் புறம்போக்கு நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து தனியாருக்கு விற்பனைச் செய்துவந்த குற்றச்சாட்டிலும் சிக்கினார் பூஞ்சோலை சீனிவாசன். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரேடாரிலும் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இருப்பினும், என்னக் காரணத்திற்காக இந்த ரெய்டு படலம் தொடர்கிறது என்கிற உறுதியான தகவல்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், இந்த ரெய்டு எம்.பி கதிர் ஆனந்தை குறி வைத்து நடத்தப்படுவதாகவும், அவருக்கு சிக்கல் ஏற்படலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இந்த நிலையில், காட்பாடியில், அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு வெளியே பந்தலில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் தி.மு.க-வினருக்கு டீ, சமோசா, கொய்யாக்காய், மாங்காய் பத்தைகள் ஸ்நாக்ஸாக வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...