தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!
`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்
ஆசிட் வீசிய பெண்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அவர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசினார். இதில் 30 சதவீதக் காயம் அடைந்த நிலையில் ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் ஆசிட் வீசிய நபர் அடையாளம் காணப்பட்டார்.

அவரது பெயர் நிசு திவாரி என்று தெரிய வந்தது. போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திவாரியை வழியில் பார்த்தனர். அவரைப் பிடிக்க முயன்றபோது போலீஸார் மீது திவாரி துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
உடனே சுயபாதுகாப்புக்கு போலீஸார் எதிர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் திவாரி காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து திவாரியை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
அவனிடம் விசாரித்தபோது, ஆன்லைன் சமூக வலைத்தளத்தில் தனக்கு அறிமுகமான அர்ச்சனா தான் தன்னை சுகுனா மீது ஆசிட் வீசச் சொன்னார் என்று தெரிவித்தார்.
அர்ச்சனா யார்? பகீர் பகீர் பின்னணி
அர்ச்சனாவின் சகோதரி ஜஹான்விக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் ராணுவ வீரர் சுகுனாவை காதலித்து வந்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பழிவாங்க ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச அர்ச்சனா சொன்னதாக தெரிவித்துள்ளார்.
போலீஸார் மேற்கொண்டு விசாரித்தபோது அர்ச்சனாவும், ஜஹான்வியும் ஒரே ஆள் என்று தெரிய வந்தது. அப்பெண் தான் ராணுவ வீரரை காதலிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ராணுவ வீரருக்கு ஏற்கனவே காதலி இருந்ததால் அர்ச்சனாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே தன்னை காதலித்த நபரை பயன்படுத்தி ராணுவ வீரரின் காதலி சுகுனா மீது ஆசிட் வீசியுள்ளார் அர்ச்சனா.
அர்ச்சனா என்று கூறப்படும் அப்பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறது.
மேலும் இதற்கு முன்பு தனது கணவருக்கு தூக்க மாத்திரையை கொடுத்துவிட்டு திவாரியுடன் வீட்டை விட்டு ஓடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அர்ச்சனாவும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி குமார் தெரிவித்தார்.