காத்திருக்க வேண்டாம்! - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
காலை நேரம்.
ரவியின் வண்டி நின்றது.
அவன் மெதுவாக கல்லூரியை நோக்கி நடந்துகொண்டு இருந்தான்.
அப்போது ஒரே சத்தம் —
காதில் சிறு சிறு கணிச்சாரு சத்தங்கள்.
அவன் விழிகள் அந்த சத்தத்தைத் தேடின.
அருகிலிருந்த கூண்டின் உள்ளே —
சிறு சிறு குருவிகள் இரை தேடிக் கூவும் ஒலி.

வகுப்புக்குள் வந்த ரவிக்கு,
மனதெங்கும் அந்த கூச்சல் குலுங்கிக் கொண்டே இருந்தது.
"யாராவது வந்து அவைகளை வெளியேற்றணும்…"
அவன் உள்ளம் பேசியது.
ஆனாலும்,
அவன் மனம் அந்த குருவிகள் போலவேதான்.
ஒரு பாடகனாக உயர்ந்த பறவை ஆக விரும்பும் அவன்,
தன்னை சூழ்ந்த குடும்பக் கட்டுப்பாட்டால், வேறு துறையில் பயணிக்கின்றான்.
அசைவில்லா ஆசைகள் —
சிறகில்லா பறவைகளா?
அந்த நேரத்தில் ஒரு குரல்:
"பேச்சுப் போட்டிக்கு யாராவது தயாரா?"
ரவிக்கு அது ஒரு சங்கு சத்தம் போல்.
கனவுக்குத் திடீர் அழைப்பு.
அவன் எழுந்து கேட்டான்:
"அய்யா… பாடல் போட்டி ஏதேனும் இருக்கா?"
ஆசிரியரின் சிறு சிரிப்பும்,
"இல்ல சார்…" என்ற பதிலும்,
கவிதை போலவே அவன் உள்ளத்தை வலியடித்தது.
கல்லூரி முடிந்தது.
பேருந்துக்காக காத்திருந்தான்.
அவனது பார்வை மீண்டும் அந்த கூண்டை நோக்கிச்சென்றது .
குருவிகள் இன்னும் கூச்சலிட்டுக்கொண்டு இருந்தன.
சிறகடித்து பறக்கவிருக்கும் ஏக்கம்!
அந்தவேளை —
ஒருவர் வந்து கூண்டைத் திறந்தார்.
சிறு நொடியில்,
குருவிகள் சட சடவென வெளியில் பறந்தன!
ரவிக்கு புரிந்தது.
"அவைகள் யாருக்காகவும் காத்திருக்கவில்லை…
அவைகளுக்கு வாய்ப்பு கிடைத்ததும்,
அவை பறந்துவிட்டன!"
அவன் மீண்டும் கல்லூரிக்கு ஓட ஆரம்பித்தான்…
வாய்ப்பு தேடவதற்காக அல்ல …
வாய்ப்பை உருவாக்க...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.