செய்திகள் :

காத்மாண்டு அருகே ஆந்திர பக்கதர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

post image

காத்மாண்டு அருகே ஆந்திர பக்கதர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பக்தர்கள் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றுவிட்டு உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் கடந்த 9ஆம் தேதி இந்தியா திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களுடைய பேருந்து இந்தியா-நேபாள எல்லையில் உள்ள சோனாலி அருகே வந்தபோது பேருந்தை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்கினர்.

பேருந்து மீது கற்களை வீசியதில் அதன் கண்ணாடிகள் உடைந்தனர். இந்த சம்பவத்தில் 8 பக்தர்கள் காயமடைந்தனர். மேலும் பயணிகளின் உடைமைகளையும் கொள்ளையடித்தனர். சேதமடைந்த பேருந்து வியாழக்கிழமை மாலை மகாராஜ்கஞ்ச் அருகே உள்ள சோனாலி எல்லையை அடைந்தது.

எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரிட்டன்!

இதுகுறித்து பேருந்து ஊழியர் ஷியாமு நிஷாத் கூறுகையில், தாக்குதலில் ஏழு முதல் எட்டு பயணிகள் காயமடைந்தனர். ஆனால் எங்களுக்கு நேபாள ராணுவ வீரர்கள் உதவ வந்தனர். பின்னர், இந்திய அரசு காத்மாண்டுவிலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது என்றார்.

ஆந்திரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜ், இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயன்றபோது கும்பல் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை உடைத்து, எங்கள் உடைமைகளைக் கொள்ளையடித்தனர்.

சோனாலி எல்லையை அடைந்த பிறகு அனைத்து பயணிகளும் விமானம் மூலம் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

மணிப்பூர் மாநிலத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) அரசு முறைப் பயணமாகச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வன்முறை ... மேலும் பார்க்க

உ.பி.யில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாய்

உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், காக் சராய் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் மனைவி ரேஷ்மா (25) வியாழக்கிழமை பிரசவ வலி... மேலும் பார்க்க

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு

கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் கண்ட்லாவில் இருந்து 80 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க