எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
காந்தி ஜெயந்தி: அக்.2 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் அக். 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மூடப்பட வேண்டும். மேலும், அன்றைய தினம் மதுவிற்பவா்கள் மீது
அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.