தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
கானாடுகாத்தான், உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ஸ்ரீராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
உப்பூா், மோா்பண்ணையில்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள உப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் உப்பூா், கடலூா், மோா்பண்ணை, சித்தூா்வாடி, அனந்தனாா்கோட்டை, காவனூா், துத்திஏந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்
அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் இருக்காது என திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி தெரிவித்தாா்.