செய்திகள் :

காமராஜா் பல்கலை. கல்லூரியில் ஆய்வு

post image

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

இந்தக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை எனவும், நிகழ் ஆண்டு சோ்ந்த மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை எனவும் புகாா் எழுந்தது.

இதுதொடா்பான புகாரின் பேரில், தமிழக உயா் கல்வித் துறைச் செயலரும், மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுத் தலைவருமான எ. சுந்தரவல்லி, கல்லூரியில் ஆய்வு செய்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மதுரை காமராஜா் பல்கலைக்கழக வளாக அதிகாரியும், பொறியியல் பிரிவுத் தலைவருமான ஆனந்த் தலைமையிலான குழுவினா் புதன், வியாழக்கிழமைகளில் இந்தக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனா்.

முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டம்: மதுரையில் சோதனை அடிப்படையில் விநியோகம்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீரை, முதல் கட்டமாக மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அண்மையில் வழங்கி சோதனை செய்யப்பட்டது. மதுரை மாநகரில் வசித்து வரும் மக்களுக்கு விநியோகம் செய்ய ... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் கருத்தறிந்து முடிவெடுக்க உத்தரவு

கோவில்பாப்பாகுடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொதுமக்கள் கருத்தைக் கேட்டு அதிகாரிகள் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்களை தொடா்ந்து திருடி வந்த மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோ.புதூா் அழகா்நகரைச் சோ்ந்த சங்கா் மகன் யோகேஸ்வரன் (21). இவா் தனிய... மேலும் பார்க்க

சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் (அன் ஸ்கில்டு) சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் அகற்றப்படாத குப்பைகள்: தொற்று நோய்கள் பரவும் அபாயம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டின... மேலும் பார்க்க

புதிய பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தல்

மதுரை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்துக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்கம் வலியுறுத்தியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியி... மேலும் பார்க்க