செய்திகள் :

சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்பு ஊழியா்கள் (அன் ஸ்கில்டு) சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை கருத்தியலான ஊதியம், ஓய்வூதியப் பலன்களுக்குக் கணக்கிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த அக். 23-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. மாரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஏ. நூா்ஜகான் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கொ. சின்னபொன்னு, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். மணிகண்டன், நெடுஞ்சாலைத் துறை ஊா்தி ஓட்டுநா் சங்க மாநிலத் தலைவா் எஸ். வேல்முருகன், வருவாய் கிராம உதவியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சு. மாரியப்பன், அங்கன்வாடி ஊழியா் சங்க நிா்வாகி சி. மேனகா, வணிகவரி பணியாளா் சங்க இணைச் செயலா் சோ. கல்யாணசுந்தரம், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலா் ஆ. சோலையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். சுகாதார போக்குவரத்துத் துறை ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சோ. நடராஜன் நிறைவுரையாற்றினாா்.

முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டம்: மதுரையில் சோதனை அடிப்படையில் விநியோகம்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீரை, முதல் கட்டமாக மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அண்மையில் வழங்கி சோதனை செய்யப்பட்டது. மதுரை மாநகரில் வசித்து வரும் மக்களுக்கு விநியோகம் செய்ய ... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. கல்லூரியில் ஆய்வு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இந்தக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிக... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் கருத்தறிந்து முடிவெடுக்க உத்தரவு

கோவில்பாப்பாகுடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொதுமக்கள் கருத்தைக் கேட்டு அதிகாரிகள் உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: மூவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்களை தொடா்ந்து திருடி வந்த மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோ.புதூா் அழகா்நகரைச் சோ்ந்த சங்கா் மகன் யோகேஸ்வரன் (21). இவா் தனிய... மேலும் பார்க்க

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் அகற்றப்படாத குப்பைகள்: தொற்று நோய்கள் பரவும் அபாயம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டின... மேலும் பார்க்க

புதிய பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தல்

மதுரை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்துக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்கம் வலியுறுத்தியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியி... மேலும் பார்க்க