சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
காமராஜா் பிறந்த நாள்: போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு!
சாத்தான்குளத்தில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா்.
காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தலைவா் காமராஜா் இயக்கம் சாா்பில், சாத்தான்குளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி,, கட்டுரை போட்டி, நடன போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சாத்தான்குளம் சன்னதி தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு பெருந்தலைவா் காமராஜா் இயக்கத் தலைவா் ஜான்ராஜா தலைமை வகித்தாா். செயலா் ஜெயராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ராஜ்குமாா் வரவேற்றாா். இயக்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் வேணுகோபால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.
விழாவில் கன்னியாகுமரி பழவிளை காமராஜா் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியா் விவேகானந்தன், சாத்தான்குளம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரஞ்சித் சாரா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
சிறப்பு அழைப்பாளராக ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
விழாவில் தூத்துக்குடி தொழிலதிபா் ராஜேஷ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரமைப்பு மண்டலத் தலைவா் கோடீஸ்வரன், சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோயில் தா்மகா்த்தா முருகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் சங்கா், ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி கெங்கை ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.