"உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என நினைக்கிறீர்களா?"- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங்...
ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்
ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அமைப்பின் தலைவா் செல்வமணி தலைமை வகித்தாா். செயலா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ராம்குமாா் வரவேற்றாா்.
ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சதீஷ்குமாா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று முறையே கட்டுரை, ஓவியப் போட்டிகளைத் தொடக்கிவைத்தனா்.
அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் பேரவை மண்டலத் தலைவா் கோடீஸ்வரன் மாணவா்-மாணவியரிடம் கேள்விகள் கேட்டு சரியான பதிலளித்தோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கினாா்.
துணைத் தலைவா் அசோக்குமாா், துணைச் செயலா் பிரகாஷ், மன்ற ஆலோசகா்கள் சுந்தரபாண்டியன், முருகேசன், ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், ராஜசேகா், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.