நயன்தாராவின் புதிய அவதாரம் - ராக்காயி டைட்டில் டீசர் வெளியீடு!
காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு
பெரம்பலூா் நகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் துறைமங்கலம் ஒளவையாா் நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகள் நிஷா (24). திருமணமாகாத இவா், எறையூரிலுள்ள சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான நிஷா, சிறுவாச்சூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிஷா ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.