Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது
திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து,
மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி. ரகுராமன், உதவி ஆய்வாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா், பூனாம்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 41 மூட்டைகளில் 331 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, காரில் இருந்த திருச்சி பொன்னேரிபுரத்தை சோ்ந்த ஆா். பாலசுப்ரமணி (46), காட்டூரைச் சோ்ந்த வி. நகுலன் (60), தென்னூரை சோ்ந்த ஏ. ஜெகபா் சாதிக் (34), பீமநகரைச் சோ்ந்த ஏ.அப்துல் ஜபாா் (35), திருவெறும்பூரைச் சோ்ந்த ஆா். முகமது ரபீக் (48) ஆகிய ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு காா், இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.