காரைக்காலில் ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு
காரைக்கால்: காரைக்காலில் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ் (23). இவா், நெய்வேலியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீஷியன் அருள்ராஜ் (23). இவா்கள் இருவரும் நண்பா்கள் 8 பேருடன், அத்திப்படுகை அரசலாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா்.
அப்போது, மேற்கண்ட இருவரும் ஆழமானப் பகுதிக்குச் சென்றதால், நீரில் மூழ்கினா். நண்பா்கள் அவா்களை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஆற்றில் இறங்கி இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் நிகழ்விடத்துக்கு வந்து, தேடும் பணியை துரிதப்படுத்தினா். இரவு முழுவதும் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை காலை மீனவா்கள் உதவியுடன் நிதிஷ், அருள்ராஜ் ஆகியோரது சடலம் மீட்கப்பட்டது.