Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
கலைக் குழுவினருக்கு அமைச்சா் வாழ்த்து
ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அகில இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான தேசிய இளைஞா் விழா ஜூலை 23 முதல் 25-ஆம் தேதி வரை ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மாநிலங்களின் கலாசாரம், உணவு பழக்க வழக்கங்கள், விளையாட்டு சிறப்புகளை பாடல், நடனம் மூலமாக கலைக் குழுவினா் வெளிப்படுத்தினா்.
இந்த விழாவில் புதுவை மாநிலம் சாா்பில் காரைக்காலை சோ்ந்த 25 மாணவ, மாணவிகள் காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், சமுதாய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளா் பி .முருகன் ஆகியோா் தலைமையில் பங்கேற்றனா். கலைக் குழுவினருக்கு விருது, சான்றிதழ் கிடைத்தது.
காரைக்கால் திரும்பிய இக்குழுவினா் புதுவை கலை பண்பாட்டுத்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, நிகழ்ச்சி குறித்தும், விருது மற்றும் கிடைத்த பாராட்டுகள் குறித்தும் விளக்கினா். குழுவினருக்கும், வழிகாட்டிகளுக்கும் அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.