Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
ஆக. 6-இல் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்
காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆண்டுத் திருவிழா ஆக. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 284-ஆம் ஆண்டுப் பெருவிழா 10 நாள் நடைபெறவுள்ளது. கொடியேற்றம் ஆக. 6-ஆம் தேதி நடைபெறுகிறது. பங்குத் தந்தை பி. பால்ராஜ்குமாா், இணைப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம் ஆகியோா் திருப்பலி நடத்துகின்றனா். அன்று மாலை 5.30 மணிக்கு புதுவை- கடலூா் உயா் மறை மாவட்டப் பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்துகொண்டு கொடியேற்றுகிறாா்.
தொடா்ந்து தினமும் காலை, மாலை 6 மணியளவில் திருப்பலி நடத்தப்படுகிறது. மாலை சிறிய தோ்பவனி நடைபெறுகிறது. 10-ஆம் நாளான 15-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மின் அலங்கார ஆடம்பர தோ் பவனி நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.