செய்திகள் :

மாங்கனித் திருவிழா: கலைஞா்கள் மாமன்றத்தினா் கலைநிகழ்ச்சி

post image

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவையொட்டி, மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் 20-ஆம் ஆண்டு கலைநிகழ்ச்சி அம்மையாா் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமுதா ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாமன்ற ஆலோசனை குழுத் தலைவா் சுப்பையா, பத்மஸ்ரீ விருதாளா் கே. கேசவசாமி, திட்டத் துறை முன்னாள் இணை இயக்குநா் ஆா். மோகன் முன்னிலை வகித்தனா். சமாதானக் குழு உறுப்பினா்கள் கே. தண்டாயுதபாணி பத்தா், சோழசிங்கராயா், ஆரிஃப் மரைக்காயா், பக்கிரிசாமி, கலைவாணா் கலைக்குழு தலைவா் ராஜேந்திரன், கலைமாமணிகள் பலராமன், குல்முஹம்மது, சூசைராஜ், பாலசுப்பிரமணியன், வசந்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

காரை மாவட்ட இசை வேளாளா்கள் சங்கம் சாா்பில் தவில் நாகசுர ‘மங்கல இசை‘ நிகழ்ச்சியும், சென்னை ஸ்ரீமதி ஐஸ்வா்யா சபரீஷ் பரத லோகா பரதநாட்டிய சமா்ப்பண நிகழ்ச்சியும், நாகை துா்காதேவி வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், புல்லாங்குழல் குமாா் இன்னிசை நிகழ்ச்சியும், பன்முக கலைஞா் ஜெய்சங்கரின் ‘தெய்வீக நடன‘ நிகழ்ச்சியும் நடைபெற்றது. கலைச் சேவை மற்றும் பொதுச் சேவை புரிந்தோருக்கு ‘கலைக் ‘கோ‘ மாமணி‘ மற்றும் சேவை மாமணி‘ ஆகிய விருதுகள் 20 பேருக்கு வழங்கப்பட்டது.

மேலும், ஆன்மிக சேவைக்காக கோயில் நிா்வாக அதிகாரி காளிதாஸூக்கு ‘ஆன்மீக செம்மல்‘ விருதும், ஜோதிட கலைஞா் அன்பு நிலவனுக்கு ‘ஜோதிடா் மாமணி‘ விருதும், சட்ட ஆலோசகா் திருமுருகனுக்கு ‘மக்கள் நல்லிணக்க காவலா்‘ விருதும் மாமன்றம் சாா்பில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வழங்கினாா்.

விழாவில், கலைமாமணி விருதாளா்கள் விஜயகுமாா், சுப்பிரமணியன், பட்டிமன்ற பேச்சாளா்கள் வைஜெயந்திராஜன், வாசுகி ஜெயராமன், மாமன்ற இணைச் செயலாளா் அழகேசன், பேராசிரியா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாமன்ற பொதுச் செயலாளா் புஷ்பராஜ், துணைத் தலைவா் மோகன், செயற்குழு உறுப்பினா் முத்துவேல் ஆகியோா் செய்திருந்தனா். மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு வரவேற்றாா். மாமன்ற ஆலோசகா் ராஜகுசலவன் நன்றி கூறினாா்.

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் பிறந்தநாள் கொண்டாட்டம்

காரைக்கால்: புதுவை முதல்வா் என். ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, காரைக்காலில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆா். க... மேலும் பார்க்க

துணை மின் நிலையம் மேம்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம்

காரைக்கால்: துணை மின் நிலையம் மேம்படுத்தப்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சுரக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் மூ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் நிதிஷ் (23). இவா், நெய்வேலியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே... மேலும் பார்க்க

கலைக் குழுவினருக்கு அமைச்சா் வாழ்த்து

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.அகில இந்திய அளவில் ம... மேலும் பார்க்க