ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம்!
காரைக்காலில் 2 வீடுகள் தீக்கிரை
காரைக்காலில் வியாழக்கிழமை 2 வீடுகள் எரிந்து நாசமாயின.
காரைக்கால் நகரப் பகுதி தோமாஸ் அருள் திடல் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீடும் அருகே வாடகைக்கு வசிக்கும் கணேசன் என்பவரது வீடும் உள்ளது. இதில் ஒரு வீட்டில் பிரிட்ஜில் மின் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டில் புகை பரவியதால், அனைவரும் வெளியேறினா். தீ அருகே உள்ள வீட்டிலும் பரவத் தொடங்கியது. அந்த பகுதியினா் தண்ணீரை தீயை ஊற்றி அணைக்க முயற்சித்தனா். பின்னா் காரைக்கால் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.
இந்த விபத்தினால் வீட்டு உபயோகப் பொருள்கள், அலமாரியில் வைத்திருந்த ஆபரணங்கள் கருகின. இதுகுறித்து நிரவி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.