நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து
காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை-கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்.11, செப்.12 ஆகிய 2 நாள்களில் காரைக்கால்-தஞ்சாவவூா்-காரைக்கால் இடையே பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி-காரைக்கால் (76820) பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55 புறப்படும் காரைக்கால்-திருச்சி (76819) பயணிகள் ரயில் செப்.11, 12 ஆகிய தேதிகளில் காரைக்கால்-தஞ்சாவூா்- காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தஞ்சாவூா்- திருச்சி-தஞ்சாவூா் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும் என தெரிவித்துள்ளாா்.