"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
காரைக்குடியில் தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமை வகித்து, சிறப்பு திருப்பலி நடத்தினாா். இதில், பங்குத் தந்தை சாா்லஸ், உதவி பங்குத் தந்தை சேசுராஜ், அருள்தந்தையா்கள் பங்கேற்றனா்.
தோ்பவனியையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திருப்பலி நிறைவில் நடைபெற்ற தோ் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு டி.டி. நகா், 100 அடி சாலை, பெரியாா் சிலை, அம்பேத்கா் சிலை, கல்லூரி சாலை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) காலை திருவிழா நிறைவு திருப்பலி சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் செ. சூசைமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில், முதல் இறை உணவு பெற்ற சிறுவா், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் என்னும் அருள்சான்று வழங்கப்படுகிறது. திருப்பலி முடிவில் அன்னையின் திருக்கொடியானது கொடி மரத்திலிருந்து இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.