Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
காரைக்குடியில் விவசாயிகள் குறைதீா் முகாம்
தேவகோட்டை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் முகாம் காரைக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்து, 26 விவசாயிகளுக்கு ரூ. 23.32 லட்சத்தில் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் உமாமகேஸ்வரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம், துணை இயக்குநா்கள், உதவி இயக்குா்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.