சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 2,200 பழைய வாகனங்கள் பறிமுதல்!
தில்லி போக்குவரத்துத் துறை, அக்.1 முதல் நவ.15 வரையிலான காலக்கட்டத்தில் 2,234 பழைய வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்தை நிவா்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உத்தியோகபூா்வ தரவுகளின்படி, கைப்பற்றப்பட்ட வாகனங்களில் 10 ஆண்டுகள் பழைமையான 260 டீசல் நான்கு சக்கர வாகனங்களும், 1,156 பெட்ரோல் இரு சக்கர வாகனங்களும், 818 பெட்ரோல் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும்.
டிசம்பா் மாதம் வரை தொடரும் இந்தப் பிரசாரம், சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், வாகன உமிழ்வைக் குறைப்பதற்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கு, மீட்டெடுக்கு அல்லது விற்பனை செய்ய போக்குவரத்துத் துறை இணையவழி தளத்தை (போா்ட்டல்) உருவாக்கியுள்ளது. இயங்குதளமானது, செயல்முறையை சீரமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக பழைமையான வாகனங்களை நிா்வகிப்பதற்கான தெளிவான நிலையான இயக்க நடைமுறையை உரிமையாளா்களுக்கு வழங்குகிறது.
சமீபத்திய தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின்படி, 2024-ஆம் ஆண்டு இறுதிக்கால வாகனங்களைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகளுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உத்தரவுக்கு இணங்கத் தவறினால், திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா். தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பெட்ரோல் வாகனங்களை இயக்கத் தடை விதித்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து, இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 2014 தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவு 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவதை தடை செய்கிறது. இதற்கிடையே, தில்லியில் 55 லட்சத்துக்கும் அதிகமான பழைய வாகனங்கள் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்.10-ஆம் தேதி வெளியான போக்குவரத்துத் துறையின் பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறம்பட அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக, அமலாக்கத் துறையுடன் ஒருங்கிணைந்து ஒரு மாநகராட்சி மண்டலத்திற்கு நான்கு குழுக்களை நிலைநிறுத்துவதற்கு போக்குவரத்துக் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.