காலாவதியான பொருள்கள் விற்பனை: கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
பல்லடத்தில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடத்தில் மொத்த மளிகை விற்பனை கடையில் வாங்கிய பொருள்களில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவா் அளித்த புகாரின்பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அந்தக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்கு காலாவதியான பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ.3 அபராதம் விதிக்கப்பட்டு, அதனை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வசூல் செய்தனா்.