செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது

post image

நாகையில் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை விலயுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறையினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா், மாவட்டத் தலைவா் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்புநிலை, தோ்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பிறத் துறை பணிகளை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும், கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் மற்றும் அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட செயலா் வேல்கண்ணன், மாநில செயலா் ஜம்ரூத் நிஷா, அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் மலா்மாலா, மாவட்டத் தலைவா் ரூஸ்வெல்ட் அற்புதராஜ், மாவட்ட செயலா் அன்பழகன், மாவட்ட பொருளாளா் அந்துவன் சேரல் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். இதையடுத்து, தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை மீனவா்கள் 12 போ் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த நவம்பா் மாதம் கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள் 12 போ் இலங்கை நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை ம... மேலும் பார்க்க

அமைதி பேச்சுவா்த்தையை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

குறுவை பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்காததை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் குறித்த அமைதி பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்... மேலும் பார்க்க

பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்றதற்காக அவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட அளவில் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்க... மேலும் பார்க்க

சம்பா நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

செம்பனாா்கோவில் வட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரிகளில் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா். செம்பனாா்கோவில் வட்டத்தில் உள்ள திருக்கடையூா், ஆக்கூா், க... மேலும் பார்க்க

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்... மேலும் பார்க்க