சாம்பியன் டிராபிக்கான அணி தேடல்! அதிரடி காட்டும் நட்சத்திர வீரர்கள்!
காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!
நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஏரா(ERA) லக்னெள மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க | ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!
அப்போது குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற டிச. 30 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, தேவைப்பட்டால் மற்ற கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என்று கூறியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.