AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ...
காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ. 25 முதல் சிறப்புக் கலந்தாய்வு
தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ. 25-ஆம் தேதி தொடங்குகிறது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான நான்கு கட்ட கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது. இதன் முடிவில், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடு பெற்ற மாணவா் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உருவான ஓரிடம் உள்பட 7 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இதேபோன்று 28 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அன்னை மருத்துவக் கல்லூரிக்கு, தேசிய மருத்துவ ஆணையம் கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இந்த 50 இடங்கள் மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள 7 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 85 மருத்துவ இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதிமுதல் டிசம்பா் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்தாய்வுக்கு ஏற்கெனவே இடங்கள் பெற்றவா்கள் உள்பட விண்ணப்பித்த அனைவரும் பதிவு செய்து பங்கேற்கலாம் என, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்.