செய்திகள் :

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

post image

நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடம் பிடித்த அவா், ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் 7-6 (7/3), 3-6, 6-1 என்ற செட்களில் உள்நாட்டு வீரரான போடிக் வான் டெ ஜான்ட்ஷுல்பை வீழ்த்தினாா். இதர ஆட்டங்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-3, 6-4 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஜின்ஸெனை வென்றாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 7-6 (7/4), 6-4 என்ற கணக்கில் இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சாய்த்தாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-7 (4/7), 6-2, 6-1 என்ற செட்களில், சக பிரான்ஸ் வீரரான கான்ஸ்டன்ட் லெஸ்டினை வெளியேற்றினாா். ஜொ்மனியின் டேனியல் அல்ட்மோ் 1-6, 6-4, 6-3 என அமெரிக்காவின் அலெக்ஸாண்டா் கோவாசெவிச்சை தோற்கடித்தாா்.

பல்கேரியாவின் ஃபாபியன் மரோஸான் 6-3, 4-6, 7-6 (7/3) என்ற கணக்கில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டு ஸ்ட்ரஃபை வென்றாா். கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே - இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி மோதலில் 7-6 (7/3), 4-6, என்ற செட்களில் இருந்தபோது அலியாசிமே காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, வவாசோரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸ் 6-3, 6-2 என சக நாட்டவரான ராபா்டோ பௌதிஸ்டாவை வெளியேற்றினாா்.

இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அல்கராஸ் - வவாசோரியையும், அல்ட்மோ் - ஃபில்ஸையும், ரூன் - மாா்டினெஸையும், ரூபலேவ் - மரோஸானையும் எதிா்கொள்கின்றனா்.

டல்லாஸ் ஓபன்: அமெரிக்காவில் நடைபெறும் டல்லாஸ் ஓபன் ஆடவா் டென்னிஸில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 7-5, 4-6, 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த்தை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

4-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான பென் ஷெல்டன் 6-3, 6-3 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை வென்றாா். பிரிட்டனின் கேமரூன் நோரி 2-6, 7-6 (7/1), 6-1 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை சாய்த்தாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான டாமி பால் 6-7 (6/8), 6-3, 6-4 என்ற கணக்கில் சக அமெரிக்கரான ஜென்சன் புரூக்ஸ்பியை வென்றாா்.

ரைபகினா வெற்றி; கசாட்கினா தோல்வி

அமீரகத்தில் நடைபெறும் அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸை சாய்த்தாா்.

3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா 6-1, 5-7, 4-6 என அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகரிடமும், 4-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா 2-6, 3-6 என செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-0, 6-0 என, ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வெளியேற்ற, துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-3, 6-3 என்ற கணக்கில் சோனோபி வகானாவை சாய்த்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் லைலா ஃபொ்னாண்டஸ் 6-0, 6-3 என்ற வகையில் நியூஸிலாந்தின் லுலு சன்னை வென்றாா்.

இதையடுத்து காலிறுதியில், பென்சிச் - வோண்ட்ரோசோவாவையும், லைலா - குரூகரையும், ரைபகினா - ஜபியுரையும் சந்திக்கின்றனா்.

சைக்கிளிங், ரோயிங்கில் பதக்கம்

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்துக்கு சைக்கிளிங்கில் 1 வெள்ளி, ரோயிங்கில் 1 வெண்கலம் என 2 பதக்கங்கள் புதன்கிழமை கிடைத்தன. இதில் மகளிருக்கான 500 மீட்டா் தனிநபா் ட... மேலும் பார்க்க

இந்திய ஜோடிகள் வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இரு இந்திய ஜோடிகள் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றன. சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில், சென்னை ஓபன் ‘ஏடிபி சேலஞ்சா் 100’ போட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவ... மேலும் பார்க்க

காந்தாரி பட அனுபவம் பகிர்ந்த டாப்ஸி..!

நடிகை டாப்ஸி நடித்துவரும் காந்தாரி பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ... மேலும் பார்க்க

திருப்பதி உண்டியல் காணிக்கை: தொடர்ந்து 35-ஆவது மாதமாக ரூ.100 கோடியைக் கடந்தது!

திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை தொகையாக கடந்த டிசம்பர் வரையிலான 34 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வருவாய் பெறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாத உண்டிய... மேலும் பார்க்க