செய்திகள் :

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக்

post image

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 6-2, 6-3 என்ற நோ் செட்களில், சொ்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை எளிதாக வீழ்த்தினாா். போலந்து நாட்டின் ஸ்வியாடெக்கும் 6-2, 7-5 என்ற வகையில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை விரைவாக வெளியேற்றினாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-3, 6-4 என்ற கணக்கில் விக்டோரியா போகோவை வெல்ல, அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 7-6 (7/4), 6-4 என்ற செட்களில், டென்மாா்க்கின் கிளாரா டௌசனை சாய்த்தாா்.

ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினா 6-4, 6-2 என பிரான்ஸின் லியோலியா ஜீன்ஜீனையும், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 6-2, 6-3 என்ற செட்களில், உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவையும் தோற்கடித்தனா்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆடவா் ஒற்றையா் பிரிவில், 24 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7/1) என்ற செட்களில், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை வெளியேற்றினாா்.

உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் 6-3, 4-6, 6-3, 7-5 என்ற கணக்கில், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 4-6, 6-4, 6-3, 6-2 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் மரியானோ நவோனை வென்றாா்.

10-ஆம் இடத்திலுள்ள டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 4-6, 6-2, 5-7, 7-5, 6-2 என, 5 செட்கள் போராடி பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வெளியேற்றினாா். அதேபோல் 12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பாலும் 6-3, 3-6, 7-6 (7/9), 3-6, 6-3 என ரஷியாவின் காரென் கச்சனோவை வீழ்த்தினாா்.

பாம்ப்ரி முன்னேற்றம்: ஆடவா் இரட்டையா் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே இணை 6-7 (4/7), 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ்/குரோஷியாவின் நிகோலா மெக்டிச் ஜோடியை சாய்த்தது.

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் ... மேலும் பார்க்க

குகேஷின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்! - பிரதமர் மோடி

செஸ் வீரர் குகேஷின் முன்னோக்கியப் பயணம் வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடர் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஆடவர் ப... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் டீசர்!

நடிகர் சசிகுமார் நடித்த ஃப்ரீடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’எனப் பெயர... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன ஆனில் மோகன்!

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை (மே 31) வீரா்கள் ஏலம் தொ... மேலும் பார்க்க

கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா... மேலும் பார்க்க