செய்திகள் :

காலிறுதியில் இந்தியா-ஜப்பான் மோதல்!

post image

ஆசிய பாட்மின்டன் ஜூனியா் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்தோனேஷியாவின் சோலோ நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை குரூப் டி பிரிவில் இந்தியா-ஹாங்காங் சீனா அணிகள் மோதின.

இதில் இந்தியா 110-100 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.

ருஜுலா ராமு 11-8 என சும் யுவை வீழ்த்தினாா். இரட்டையா் பிரிவில் பாா்கவ் ராம்-விஸ்வா தேஜ் 22-13 என சியுங் சாய்-டெங் சியை வீழ்த்தினா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ஹாங்காங்கின் லாம் கா 13 புள்ளிகளை ஈட்டினாா். உலக ஜூனியா் நம்பா் 1 வீராங்கனை தன்வி சா்மா

தனக்கு எதிராக ஆடிய லியு ஹோய் அன்னாவை வீழ்த்தி 66-54 என இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா். அடுத்த நான்கு ஆட்டங்கள் மிகவும் நெருக்கடியாக இருந்தாலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி குரூப் டி பிரிவில் முதலிடத்துடன் காலிறுதிக்கு தகுதிபெற்றது.

குரூப் ஏ பிரிவில் ஜப்பான் முதலிடத்தையும், தாய்லாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றன. காலிறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

இட்லி கடை அப்டேட்!

தனுஷ் நடித்த இட்லி கடை படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து, குப... மேலும் பார்க்க

இந்தியாவின் நம்.1 பணக்கார நடிகை யார் தெரியுமா?

சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளாக ஒரு வெற்றிப்படத்தைக்கூட கொடுக்காத நடிகை நம். 1 பணக்காரராக இருக்கிறார். இந்தியாவில் சினிமா அறிமுகமான காலத்திலிருந்தே அதிக சம்பளமும் புகழும் கிடைக்கும் துறையாகவே நீடித்து வ... மேலும் பார்க்க

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கடைசி நாள்! நடிகை மணிமேகலை உருக்கம்

சின்ன திரை நடிகை மணிமேகலை ஜீ தமிழில் தனது கடைசி நாள் குறித்து உருக்கமாக விடியோ பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத... மேலும் பார்க்க

எதிர்நீச்சலுக்கு போட்டியாக ஜீ தமிழில் சின்னஞ்சிறு கிளியே! ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சின்னஞ்சிறு கிளியே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரு... மேலும் பார்க்க

மோகன்லாலால் ஃபஹத் ஃபாசில் ரசிகர்களுக்கு சங்கடம்?

மோகன்லால் படத்தின் டீசர் வசனம் ஃபஹத் ஃபாசில் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது... மேலும் பார்க்க

ஏகே - 64: ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம்?

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பே... மேலும் பார்க்க