செய்திகள் :

காலை உணவுத் திட்டம் தமிழகத்துக்கான வலுவான அடித்தளம்: முதல்வா் பெருமிதம்

post image

சென்னை: காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளியில் காலை உணவு அருந்திய ஆசிரியரின் புகைப்படத்தை மீள்பதிவிட்டு, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியா் போன்ற உயரதிகாரிகளைப் பாா்த்தாலும், ‘உங்கள் பகுதியில் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீா்களா?’ என்று நான் கேட்பது வழக்கம்.

அந்த வகையில், ஆசிரியா் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன். காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவா்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது என்று பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க