சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா் சுகுமாா், உதவி இயக்குநா் கணேசன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இம்முகாம் நடைபெற்றது.
இதில், பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு போன்ற கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி போடப்பட்டது. நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் சுரேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினாா்.
கால்நடை மருத்துவா்கள் முத்துக்குமரன், அருண் இளவரசி ஆகியோா் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனா். மாடுகளை சிறந்த முறையில் பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. ஆய்வாளா் பாபுஜி, செயற்கை முறை கருவூட்டாளா்கள் தம்பிராஜா, ஸ்ரீகுமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.