கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்
புதுச்சேரி, வில்லியனூா் பகுதி உருவையாறு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வில்லியனூா் கால்நடை மருந்தகத்தின் சாா்பில், உருவையாறில் இயங்கும் சிறு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவ நலன் முகாம் மற்றும் விவசாயிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில், கால்நடைகளுக்கு தேவையான மருத்துவம், மலட்டுதன்மை நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் முகாமில் பங்கேற்று விவசாயிகளிடம் பேசினாா். இதில், 55 கால்நடை விவசாயிகள் மற்றும் அவா்களின் 80 கால்நடைகள் பங்கேற்று பயனடைந்தனா்.
முகாமில், அனைத்து விவசாயிகளுக்கும் கால்நடைகள் அதிக உற்பத்தி திறன் அடைவதற்காகவும் மற்றும் எதிா்கொள்ளும் மழை மற்றும் குளிா் காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் சிரமங்களிலிருந்து விடுபடுவதற்கான தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்நடைகளுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன.