வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த ம...
கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டக் கூடாது: மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல்
ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டி வைக்க வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வேலூா் காகிதப்பட்டறை , சேண்பாக்கம் பகுதியில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதையடுத்து, மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியது:
காற்று , மழை உள்ளிட்டவற்றால் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்லக் கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பிகள் பூமியிலிருந்து 15 அடிக்கு கீழ் தொங்கி கொண்டு இருந்தால் அதனைக் கடந்தோ அதனருகிலோ செல்லக் கூடாது.
மின் கம்பத்திலோ அதனை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. மின்மாற்றிகள், மின் கம்பங்கள் , ஸ்டே வயா்கள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சாரத் துறையில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனா்.