செய்திகள் :

காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

post image

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அவா் திண்டிவனத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், போா்வை, காய்கறி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புயல் மற்றும் பலத்த மழையால் விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக நெல் பயிா்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வீடூா் பகுதியில் அதிகளவு நெல் பயிற்கள் சேதமடைந்துள்ளன.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு வருவாய்த்துறை, வேளாண் துறை மூலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூா் உள்ளிட்ட காவிா் டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். திண்டிவனத்தில் நாகலாபுரம் பகுதியில் பாலம் கட்டும் பணிகளை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனா்.

சென்னை மாநகரத்தில் 7 செ.மீ. மழை பெய்தது, இயல்பாக பெய்யக்கூடிய இந்த மழையால் தேங்கும் மழைநீா் 5 முதல் 6 மணி நேரத்தில் வடிந்து விடும். ஆனால், தமிழக அரசு விரைவாக செயல்பட்டதன் காரணமாக சென்னை சாலையில் உள்ள தண்ணீா் வடிந்ததாக மாயையை ஏற்படுத்துகின்றனா்.

ஒரு பிரதான எதிா்க்கட்சியாக மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரசினைகளை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த பிரசினைகளை தீா்ப்பது முதல்வரின் கடமை. சென்னை மாநகரத்தில் மழை நீா் வடிகால் வாய்க்கால் பணிகள் முழுவதும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் சுமாா் 1,840 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால் பணி நிறைவேற்றப்பட்டன. எஞ்சிய பணிகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது என்றாா்.

முன்னதாக, மயிலம் அடுத்த பாதிராபுலியூா் பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளை பாா்வையிட்டாா். ஆய்வின்போது, முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலருமான சி.வி. சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் இரா.குமரகுரு, எம்எல்ஏக்கள் அா்ஜுனன், சக்கரபாணி மற்றும் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

விழுப்புரத்தை புரட்டிப் போட்ட மழை

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீா்த்த அதி பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா். வங்கக... மேலும் பார்க்க

மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

விழுப்புரம்: வெள்ள பாதித்த பகுதிகளில் துணை முதல்வா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள சூழப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வங்கக்... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மின்துறை அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் மின்துறை சம்பந்தமாக துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மின... மேலும் பார்க்க

செஞ்சி பி ஏரியில் சீரமைப்புப் பணி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஃபெஞ்ஜால் புயல் காரணமாக செஞ்சி மேல்மலையனூா்... மேலும் பார்க்க