``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்...
காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே குடும்பத் தகராறில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் அசன்முகமது (33). இவா் கோவையில் உள்ள ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். அசன்முகமது கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் கீரனூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தாா்.
அப்போது, இவருக்கும் இவரது தாயாருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த அவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].